/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 02, 2024 02:06 AM
மரக்காணம்: மரக்காணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் கெஜலட்சுமி, தலைமை ஆசிரியர் அருள்செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் வாசுகி முன்னிலை வகித்தனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார்.
முகாமில் குழந்தை திருமணம் ஒழிப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக போக்சோ சட்டம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
குழந்தைகளின் இலவச சேவை எண் 1098 எண்ணின் பயன்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளர் எட்டியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.