ADDED : ஜூலை 04, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சியில் நெகிழிப் பை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் அப்துல் கலாம் வல்லரசு இயக்கம் சார்பில் நடந்தது.
பஸ் நிலையத்தில் நடந்த பிரசாரம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பொறியாளர் தமிழ்இனியன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. பொதுமக்களுடன் இணைந்து அனைவரும் நெகிழிப் பை பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியேற்றனர்.
பயிற்றுநர்கள் சாதிக் பாஷா, அருள்தாஸ், புகழரசன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
