/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 28, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் உலக மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். மலேரியா நோய் பரவும் முறை, சிகிச்சை முறை, தடுக்கும் வழிகள் குறித்து சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர்கள் அருண்குமார், விஜயகுமார் ஆகியோர் விளக்கினர். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் மலேரியா ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

