/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமானடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஊராட்சி தலைவர் வீரா ஏழுமலை பெருமிதம்
/
கண்டமானடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஊராட்சி தலைவர் வீரா ஏழுமலை பெருமிதம்
கண்டமானடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஊராட்சி தலைவர் வீரா ஏழுமலை பெருமிதம்
கண்டமானடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஊராட்சி தலைவர் வீரா ஏழுமலை பெருமிதம்
ADDED : மே 10, 2024 12:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கண்டமானடி ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு சிறந்த ஊராட்சியாக திகழ்கிறது என ஊராட்சி தலைவர் வீரா ஏழுமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சியில், அமைச்சர் பொன்முடி, லட்சுமணன் எம்.எல்.ஏ., வழிகாட்டுதல்படி, ஊராட்சி துணைத் தலைவர் ராஜா மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கண்டமானடி காலனியில், ஊரக வேலை திட்டத்தில், அம்பேத்கர் நகரில் 7.50 லட்சம், விடுதலை நகரில் 4.50 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை, 16.50 லட்சத்தில் நுாலக சாலை, 15வது நிதிக்குழும மானியத்தில் 4.33 லட்சத்ததில் சிறுபாலம், அரியலூர் இணைப்பு சாலை அருகே 4.33 லட்சத்தில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.
மேலும், 7.50 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 10 பேருக்கு கல் வீடுகள் கட்டப்பட்டது.
அரசு ஊழியர் நகரில் 14 லட்சத்தில் கழிவு நீர் வாய்க்கால், 7.50 லட்சத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 10 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.
42 லட்சத்தில் ஜல்லி சாலைகள், 50 லட்சத்தில் பேவர் பிளாக் சாலைகள், எம்.எல்.ஏ., நிதியில் 40 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, 10 பேருக்கு பிரதமர் வீடு திட்டத்தில் கல் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர் நகரில் 10 லட்சத்தில் சிமென்ட் சாலை, 7.5 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, 5 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால், 22 லட்சத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது.
ஜானகிபுரத்தில் 13.50 லட்சத்தில் குடிநீர் குளம் சீரமைப்பு, 7.50 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, 4.50 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால், 1.60 லட்சத்தில் கழிவறை வளாகம் கட்டப்பட்டுள்ளது.
14.50 லட்சத்தில் உண்ணாமலை நகரிலும், கிருஷ்ணா நகர், கணபதி நகர், ரகமத் நகர், மாலதி நகரில் 43 லட்சத்தில் ஜல்லி சாலையும் போடப்பட்டது.
கண்டமானடியில் 5 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, 30 லட்சத்தில் அரசு தொடக்க பள்ளிக் கட்டடம் 6.50 லட்சத்தில் கழிவறை, 1.54 லட்சத்தில் சுகாதார வளாகம், இருளர் குடியிருப்பில் 10 லட்சத்தில் சிமென்ட் 10 கல் வீடுகள் கட்டப்பட்டது.
முக்கிய சாலை சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.