/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டலில் சாப்பிட்டவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்
/
ஓட்டலில் சாப்பிட்டவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்
ஓட்டலில் சாப்பிட்டவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்
ஓட்டலில் சாப்பிட்டவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்
ADDED : மே 28, 2024 05:14 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓட்டலில் சாப்பிட்டபோது எழுந்த தகராறில், சாப்பிட வந்தவரை பீர் பாட்டிலால் குத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி பகுதி எல்லீஸ் சத்திரம் சாலையில், அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த சசிக்குமார், 30; ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஜிஆர்பி தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பிரகாஷ்ராஜ்,27; அங்கு வந்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட பிறகு, அதற்கான பணத்தை கொடுக்க அவர் காத்திருந்துள்ளார். அதனை வாங்க சிறிது நேரமாகியுள்ளது. இதனால், வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஓட்டல் உரிமையாளர் சசிக்குமார் திட்டி, அங்கு கிடந்த பீர் பாட்டிலால், பிரகாஷ்ராஜை குத்தி தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் சசிக்குமார் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.