/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., தேர்தலுக்குப்பின் காணாமல் போகும்: வி.சி., தலைவர் திருமாவளவன் 'ஆரூடம்'

ADDED : மார் 28, 2024 11:03 PM
விழுப்புரம்: 'இந்த தேர்தலோடு பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் காணாமல் போகும்' என வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரத்தில் அவர் பேசியதாவது:
பா.ஜ.,வின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சி அடைவு, விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. தேர்தலை யொட்டி, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மோடி நாடகமாடுகிறார், தேர்தல் முடிந்து மக்கள் ஓட்டு போட்ட மறுநாளே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவார்.
பத்தாண்டுகளில் அவர் சாதித்த சாதனை உலக நாடுகளுக்கு பறந்ததுதான். உலக பணக்காரர் வரிசையில் அதானி, அம்பானி 4வது இடத்தை எட்டி பிடித்திருக்கிறார்கள். இந்த இடத்தைப் பிடிக்க மோடியே காரணம்.
ஆனால், நம்மை பல வழிகளில் வருத்திக் கொண்டிருக்கிறார். நம்மில் ஜாதி, மத உணர்வைத் துாண்டுவதும் தான் மோடி செய்து கொண்டிருக்கிற தொண்டு. பா.ஜ., ஆட்சியை துாக்கி எறிய வேண்டும்.
அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தல் முடிவுக்குப்பின் இந்த கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.