/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது
/
தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது
தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது
தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது
ADDED : ஆக 13, 2024 06:19 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேசிய கொடியோடு ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த விழுப்புரம் - திருக்கோவிலுார் வரை தேசியகொடி ஏந்தி இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில், போலீஸ் தடையை மீறி ஊர்வலம் செல்ல விழுப்புரம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் இருந்து நேற்று காலை 11:00 மணிக்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் தேசியகொடியுடன் திரண்டனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீசார், ஊர்வலத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.,வினர் 33 பேரை கைது செய்தனர்.