
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், வானுாரில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
திருச்ச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த கூட்டத்திற்கு, வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் சண்முகம், முருகன், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகர், பொதுச் செயலாளர்கள் ராஜன், பாண்டியன், எத்திராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.