/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நமக்கு எதிரி பா.ஜ.,தான்: திருமாவளவன் பேச்சு
/
நமக்கு எதிரி பா.ஜ.,தான்: திருமாவளவன் பேச்சு
ADDED : ஜூலை 06, 2024 05:24 AM

விக்கிரவாண்டி: அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் ஒரே கொள்கை ரீதியான கட்சி. நமக்கு ஒரே எதிரி பா.ஜ.,தான்' என திருமாவளவன் பேசினார்
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி, எம்.பி.,க்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., நிற்காமல் பின்வாங்கியுள்ளது. அதனால், பா.ஜ., - பா.ம.க., ஓரணியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர்.
சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி விடலாம் என நினைத்து பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியே வந்து தனித்து நின்றது. ஆனால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கொள்கை ரீதியில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் ஒன்றாகும். இது மக்களுக்கு தெரியும். நமக்கு ஒரே எதிரி பா.ஜ.,தான். இண்டியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் அண்ணாமலையை விட்டு உளறிக் கொண்டிருந்தனர். தினமும் தலைப்புச் செய்தியாக வந்த அண்ணாமலை கூட வெற்றி பெறவில்லை.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் சமூக நீதிக்கு எதிரான கட்சி பா.ஜ., என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
இந்த தொகுதி மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற தி.மு.க., வேட்பாளர் சிவாவிற்கு பெருவாரியான ஓட்டுகளை அளித்து ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
அமைச்சர்கள் சேகர்பாபு, கணேசன், வி.சி., மாவட்ட செயலாளர் திலிபன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் இளந்திரையன், துணைச் சேர்மன் ஷீலா தேவி சேரன், நகர செயலாளர் சந்துரு, சேர்மன் அப்துல் கலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நகர செயலாளர் நைனா முகமது உட்பட பலர் பங்கேற்றனர்.