/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
/
பா.ஜ., தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஜூலை 30, 2024 11:32 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் பா.ஜ., மாநில செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். நகர தலைவர் விஜயன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் அருள் பிரகாஷ் தொடக்க உரையாற்றினார்.
ஒன்றிய தலைவர்கள் ராஜ பாலாஜி, அருண், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கம், முரளி முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பார்வையாளர் மீனாட்சி நித்யசுந்தர், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

