/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொறியியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்
/
பொறியியல் கல்லுாரியில் ரத்த தான முகாம்
ADDED : மே 03, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லுாரியில் செஞ்சுலுவை மற்றும் இளம் செஞ்சுலுவை சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
முகாமை கல்லுாரி முதல்வர் செந்தில் தொடங்கி வைத்து, ரத்த தானத்தின் அவசியம் குறித்து விளக்கினார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி ரத்த வங்கி டாக்டர் விஜயா, விழுப்புரம் அரசு மருத்துவமனை டாக்டர் லதா தலைமையிலான குழுவினர் ரத்த தானத்தை பெற்றனர்.
முகாமில், 85 மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். செஞ்சுருள் சங்க அலுவலர் பழனி உள்ளிட்டோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.
ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.