/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
/
பா.ம.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 16, 2024 11:57 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கர் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கர், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வி.சாத்தனுார், பொன்னங்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கொங்கராம்பூண்டி, வி.சாலை, டி.புதுப்பாளையம், தென்பேர், சின்னத்தச்சூர், எசாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
பா.ம.க., மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், கோபாலகிருஷ்ணன், ஏழுமலை, துணைச் செயலாளர் சதீஷ் , மாவட்ட அமைப்பு செயலாளர் தீனவேலு.
பா.ஜ., மாவட்ட தலைவர் கலிவரதன், ஒன்றிய தலைவர் மோகன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், அ.ம.மு.க., ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி,கார்த்திகேயன்,கிருஷ்ணமூர்த்தி, ஓ.பி.எஸ்.,அணி ஒன்றிய செயலாளர் மோகன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.

