ADDED : ஆக 15, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலும் அருகே ஸ்கூட்டியில் மது பாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் 42; இவர் நேற்று காலை 11:00 மணிக்கு மயிலம் அடுத்த கொல்லிங்குணம் அருகே ஸ்கூட்டியில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வாகன சோதனை செய்து கொண்டு இருந்த மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஸ்கூட்டியை நிறுத்தி பரிசோதித்த போது அதில் 18 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.