/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., தனியாக நின்றாலும் ஓட்டு கிடைத்திருக்கும்: பொன்முடி பேச்சு
/
பா.ம.க., தனியாக நின்றாலும் ஓட்டு கிடைத்திருக்கும்: பொன்முடி பேச்சு
பா.ம.க., தனியாக நின்றாலும் ஓட்டு கிடைத்திருக்கும்: பொன்முடி பேச்சு
பா.ம.க., தனியாக நின்றாலும் ஓட்டு கிடைத்திருக்கும்: பொன்முடி பேச்சு
ADDED : ஏப் 04, 2024 11:08 PM
விழுப்புரம்: பா.ம.க., தனியாக நின்றிருந்தால் கூட மக்கள் வாக்களித்திருப்பார்கள். ஆனால், அவர்களது கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை என்று, அமைச்சர் பொன்முடி விமர்சித்தார்.
விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம், மேல்பாதி உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க., கூட்டணி வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமார் எம்.பி.,யை ஆதரித்து,அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலின், கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 ஆயிரம் வழங்கினார். மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறார். மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு தேர்தல் முடிந்ததும், தகுதியுள்ளவர்களுக்கு கிடைக்க செய்யப்படும்.
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இனி, மாணவர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில், நம்மை எதிர்த்து 2 கட்சிகள் நிற்கிறது. அதில், அ.தி.மு.க., எங்கே என்று தெரியவில்லை. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா அணி என 5 ஆக உடைந்துள்ளது.
இப்போது, மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டு வர, எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என, அவர் கூறுகிறார்.
அப்படி எனில், அவரது ஆட்சியில் ஏன் செயல்படுத்தவில்லை?.
இப்போது, பா.ம.க., ஓட்டு கேட்க வருவார்கள். அந்த கட்சி தனியாக நின்றிருந்தால் கூட மக்கள் வாக்களித்திருப்பார்கள். அவர்களது கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. இடஒதுக்கீடுக்காக போராடுவதாக கூறும், பா.ம.க., வினர், அதற்கு எதிரான பா.ஜ., வுடன் கூட்டணி வைத்துள்ளனர். மிக பிற்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. அதனை பாமக ராமதாஸ் பாராட்டினார்.
தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம், பள்ளி செல்லும் குழந்தைகள் பசியின்றி கற்க உதவுகிறது. இதன் தாக்கம் இந்தியா கடந்து கனடா வரை சென்றுள்ளது. இப்படி, வாக்குறுதி திட்டங்களை செய்துவிட்டு, வாக்கு கேட்க வந்திருக்கிறோம் என்று பொன்முடி பேசினார்.

