/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது
/
பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது
ADDED : செப் 04, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் பகுதியில், கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியில் இருந்து 213 பிராந்தி பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், மலையரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சாரதி, 42; என தெரிந்தது.
உடன் ஸ்கூட்டர் மற்றும் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து சாரதியை கைது செய்தனர்.