ADDED : செப் 01, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கிளியனுார் அருகே கார் மோதிய விபத்தில் கொத்தனார் இறந்தார்.
கிளியனுார் அடுத்த பேராவூர் கீழண்ட தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ், 55; கொத்தனார்.
நேற்று முன்தினம் மாலை பஸ் ஏறுவதற்காக தென்கோடிப்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி புறவழிச்சாலையில் சென்றபிரீசா கார், ராமதாஸ் மீது மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.