/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தம்பி வீட்டிற்கு தீ அண்ணன் கைது
/
தம்பி வீட்டிற்கு தீ அண்ணன் கைது
ADDED : மார் 06, 2025 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய் நல்லுார்: சொத்து பிரச்னையால் தம்பி வீட்டிற்கு தீ வைத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தி.மழவராயநல்லுாரைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 47; இவருக்கும், இவரது அண்ணன் ராஜாராமன், 50; என்பவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியதாக கூறி நேற்று முன்தினம் ஜானகிராமன் பைக்கை, ராஜாராமன் எடுத்துச் சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால், ஜானகிராமன் கூரை வீட்டிற்கு ராஜாராமன் தீ வைத்துவிட்டு தப்பியோடினார்.
புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து ராஜாராமனை நேற்று கைது செய்தனர்.