/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டட தொழிற் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிற் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
கட்டட தொழிற் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
கட்டட தொழிற் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2024 04:02 AM

விழுப்புரம், : அனைத்து பணப்பலன்களை மனு செய்த 30 நாட்களுக்குள் வழங்கக்கோரி, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெயமலர் தலைமை தாங்கினார்.
தலைவர் திவ்ய பிராங்ளின், துணைத் தலைவர்கள் முருகன், ஜான்பீட்டர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் சவுரிராஜன் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். அனைத்து பணப்பலன்களும் மனு செய்த 30 நாளில் வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் மாதம் 2,000 ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. துணைச் செயலாளர் கீர்த்தி நன்றி கூறினார்.