/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் கம்பி மீது பஸ் உரசல் திண்டிவனத்தில் பரபரப்பு
/
மின் கம்பி மீது பஸ் உரசல் திண்டிவனத்தில் பரபரப்பு
ADDED : செப் 04, 2024 06:56 AM
திண்டிவனம்,: திண்டிவனத்தில் ஆம்னி பஸ் மேலே இருந்த லக்கேஜ் உரசியதால், மின்கம்பி அறுந்து விழுந்தில் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ் நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு திண்டிவனம் சந்தைமேடு அருகே வந்த போது, பஸ்சின் மேல்பகுதியில் இருந்த லக்கேஜ், மேலே சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பொறி பறந்தது. மேலும் மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் அவ்வழியே வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
மின் ஊழியர்கள் விரைந்து சென்று, மின் இணைப்பை சரி செய்தனர்.
இச்சம்பவத்தால் சந்தேமேடு பகுதியில் பரபரப்பு நிலவியது.