/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் நிலைய கட்டுமான பணி நகர் மன்ற தலைவர் ஆய்வு
/
பஸ் நிலைய கட்டுமான பணி நகர் மன்ற தலைவர் ஆய்வு
ADDED : ஜூலை 06, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் டவர் அருகே6 ஏக்கர் பரப்பளவில் 20 கோடி ரூபாய் செலவில் நகராட்சி சார்பில், புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.
பஸ் நிலைய கட்டு மானப் பணிகளை, நேற்று காலை நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளின் முன்னேற்றம் குறித்து, பஸ் நிலைய ஒப்பந்ததாரரிடம், கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.