/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரத்தில் கார் மோதி 3 பேர் படுகாயம்
/
மரத்தில் கார் மோதி 3 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 23, 2024 05:52 AM

மயிலம்: மயிலம் அடுத்த கேணிப்பட்டு கிராமத்தில் மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
நாகர்கோவில் டவுன், பார்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 57; இவரது மனைவி சுஜிதா, 50; இருவரும் சென்னைக்கு சொந்த வேலையாக ஹூண்டாய் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்தி, 40; என்பவர் ஓட்டினார்.
நேற்று காலை 6:30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேணிப்பட்டு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார்த்தி, 40; சுரேஷ்பாபு, சுஜிதா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
உடன் 3 பேரும், மயிலம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.