/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறு 13 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 13 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 22, 2024 05:43 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே முன்விரோத தகராறில் இருதரப்பினர் தாக்கிக் கொண்டதில் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் சபரிநாதன், 26; இவரது அண்ணன் சபரிசன், 30; இருவரும் கடந்த 19ம் தேதி பைக்கில் அதே கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது முன் விரோதம் காரணமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த அப்பு என்கிற கலைமன்னன், வீரமணி, தீனா, கீர்த்தி, சரண்ராஜ், சூர்யா, தனுஷ் ஆகியோர் தாக்கினர்.
இதையறிந்த சபரிநாதன் தரப்பினர் அஜித்குமார், சிவா, சேகர், ரவி, ஸ்ரீதர் ஆகியோர் அவர்களை தாக்கினர். இரு தரப்பு புகார்களின் பேரில், கலைமன்னன், சபரிநாதன் உட்பட 13 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

