/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் விதிமீறல் வி.சி., நிர்வாகி உட்பட 80 பேர் மீது வழக்கு
/
தேர்தல் விதிமீறல் வி.சி., நிர்வாகி உட்பட 80 பேர் மீது வழக்கு
தேர்தல் விதிமீறல் வி.சி., நிர்வாகி உட்பட 80 பேர் மீது வழக்கு
தேர்தல் விதிமீறல் வி.சி., நிர்வாகி உட்பட 80 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 08, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் தேர்தல் விதிமுறை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வி.சி., நிர்வாகி உட்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று முன்தினம் வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில், விதிமீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக வி.சி., தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் உட்பட 80 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.