/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கீழே விழுந்து பயணி காயம் பஸ் டிரைவர் மீது வழக்கு
/
கீழே விழுந்து பயணி காயம் பஸ் டிரைவர் மீது வழக்கு
ADDED : மார் 08, 2025 03:28 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பஸ் ஏற முயன்ற பயணி கீழே விழுந்த காயமடைந்தது தொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் வித்யாபதி மனைவி நதியா, 36; இவர், கடந்த 2ம் தேதி காலை, விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்ல பழைய பஸ் நிலையம் அருகே நின்ற தனியார் பஸ்சில் ஏற முயன்றார்.
அவர் பஸ் ஏறுவதற்கு முன், டிரைவர் பஸ்சை இயக்கியதால், கீழே விழுந்த நதியா பலத்த காயமடைந்து, விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் பஸ் டிரைவர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

