ADDED : ஜூன் 24, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது.
இக்கோவிலில் கடந்த 18ம் தேதி ஆனி மாத உற்ச வம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது.
அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் கங்கை மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மதியம் 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு நடந்தது.
இரவு 9:00 மணிக்கு கோவில் திருவீதி புறப்பாடு நடந்தது.