/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வணிகர் சங்கங்களின் பேரவை துவக்க விழா
/
வணிகர் சங்கங்களின் பேரவை துவக்க விழா
ADDED : ஆக 16, 2024 06:27 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வீ.புதுப்பாளையம் கெடார் வணிகர் சங்கங்களின் பேரவை துவக்க விழா நடந்தது.
வீ.புதுப்பாளையம் கிராமத்தில் நடந்த விழாவிற்கு, ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட வணிகர் சங்க பேரவைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் முத்துகருப்பன், ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மணிகண்டன் வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன், நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் சவுந்தர்ராஜன், ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன், மாவட்ட வணிகர் சங்க பேரவைத் தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். தலைவராக வேலழகன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இணைச் செயலாளர் தங்கபிரகாஷ் நன்றி கூறினார்.