ADDED : மார் 05, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சாமிபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி தேர் திருவிழா நடந்தது.
கோவிலில் மகா சிவராத்திரி விழா கடந்த 26ம் தேதி சக்தி கரகம் எடுத்தல், பக்தர்கள் காப்பு கட்டுதலோடு துவங்கியது. தொடர்ந்து, நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்த தேர் திருவிழாவில், பக்தர்கள் கோவிலிலிருந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
இதையடுத்து, மயானக் கொள்ளை நடந்தது. இன்று 5ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு தெப்பல் உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.