/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேரடி செங்கழுநீர் மாரியம்மன் கோவில் ராஜகோபுர வாயிற்கால் பிரதிஷ்டை
/
சேரடி செங்கழுநீர் மாரியம்மன் கோவில் ராஜகோபுர வாயிற்கால் பிரதிஷ்டை
சேரடி செங்கழுநீர் மாரியம்மன் கோவில் ராஜகோபுர வாயிற்கால் பிரதிஷ்டை
சேரடி செங்கழுநீர் மாரியம்மன் கோவில் ராஜகோபுர வாயிற்கால் பிரதிஷ்டை
ADDED : ஆக 20, 2024 05:32 AM

வானூர்: துருவை சேரடி செங்கழுநீர் மாரியம்மன் கோவில் ராஜகோபுர வாயிற்கால் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது.
வானூர் வட்டம் துருவை கிராமத்தில் சேரடி செங்கழுநீர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கோவில் ராஜகோபுர வாயிற்கால் பிரதிஷ்டை நடந்தது.
மொரட்டாண்டி நவக்கிரஹ ஆலய சிதம்பர கீதாராம குருக்களால் யாகங்கள், சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ச்சியாக காலை 6.00 மணிக்கு, ராஜகோபுர வாயிற்கால் பிரதிஷ்டை நடந்தது. எம்.எல்.ஏ., சக்ரபாணி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி, ஒன்றிய கவுனசிலர் ஜமுனா சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகி மணிபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.