ADDED : ஆக 08, 2024 12:48 AM

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுார் வட்டார பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் சித்தலிங்கமடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் துரை தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ராக்பெல்லர் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில், 11,14,17,19 வயதினர்களுக்கான, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.
இதில், 80க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சதுரங்க போட்டி தலைமை நடுவர்களாக சர்வதேச சதுரங்க வீரர் சிவக்குமார், ஜெயகாந்தன் ஆகியோரும், நடுவர்களாக, உடற்கல்வி ஆசிரியர்கள் சம்பந்தம், நடராஜ், சுந்தர்ராஜ், பச்சையப்பன், ஜெயந்தி, பழனி, அன்பழகன், சின்னப்பராஜ், முத்துவேல், யுவராஜ், சசி, விஜயகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.
முடிவில், போட்டியில் வென்றோருக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், முதல் மூன்று இடங்களை பெறுவோர், மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.