/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜூலை 30, 2024 11:48 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
வேம்பியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கி மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார்.
துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி முன்னிலை வகித்தனர் . பி.டி.ஓ., பாலச்சந்திரன் வரவேற்றார்.
முகாமில் பி.டி.ஓ., குலாத்துங்கன், மண்டல பி.டி.ஓ., நாகராஜன், தாசில்தார் யுவராஜ், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர் ராமகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் கங்கா கவுரி ,ஜெய்சன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.