/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 10, 2024 05:15 AM
அவலுார்பேட்டை: வடபாலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து, நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தாசில்தார் முகமது அலி, பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமத், துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
செஞ்சி
மேல்சேவூர் ஊராட்சியில் நடந்த முகாமிற்கு, சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வளர்மதி வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் திட்டம் குறித்து பேசினார். பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தாசில்தார் ஏழுமலை நன்றி கூறினார்.