/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 11, 2024 05:06 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடந்தது.
முகாமிற்கு, உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., பாலச்சந்திரன் வரவேற்றார்.
முகாமில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, தனி தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., குலோத்துங்கன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் மீனா, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, செயலாளர் ரவிதுரை, ஊராட்சி தலைவர் காந்தரூபி, கண்காணிப்பு குழு எத்திராசன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், வேளாண்மை உதவி இயக்குனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.