/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 21, 2024 06:31 AM

மயிலம் : மயிலம் அடுத்த தீவனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ஹரிதா சம்சுதீன் வரவேற்றார்.
திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் ஆகியோர் கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தி.மு.க., மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், செழியன் வாழ்த்தி பேசினர்.
மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிராம மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கினர்.