/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
கண்டமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : செப் 04, 2024 11:12 PM

கண்டமங்கலம்: தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கண்டமங்கலம் வள்ளி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
முகாமிற்கு விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வித்யாதரன்,ஊராட்சி தலைவர்கள் கவிதாகுமார், கவுரிதுரை, தனம்அருளரசன், நாயகம் நாகராஜன், வனிதாமுருகன், ரஞ்சிதம்பாலக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டமங்கலம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., மணிவண்ணன் வரவேற்றனர். கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
முகாமில் கொத்தாம்பாக்கம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் கணேசன், ஊராட்சி செயலர்கள் அருணகிரி, தமிழரசன், லட்சுமணன், சுப்ரமணி, வெங்கடேசன், திருமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவக்குமார் நன்றி கூறினார்.