/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஆக 29, 2024 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சிங்கனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் பழனி முன்னிலை வகித்தார்.
முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அமைச்சர் மஸ்தான் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில், தாசில்தார் சிவா, முகாம் கண்காணிப்பு அலுவலர் சரவணன், மரக்காணம் பி.டி.ஓ., சிவநேசன், ஊராட்சி தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் கன்னியம்மாள், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.