/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பில்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் பங்கேற்பு
/
பில்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் பங்கேற்பு
பில்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் பங்கேற்பு
பில்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் பங்கேற்பு
ADDED : செப் 07, 2024 05:35 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பில்லூர் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை அமைச்சர் துவக்கி வைத்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
விழுப்புரம் அருகே கோலியனூர் ஒன்றியம் பில்லூர் ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பழனி தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன் வரவேற்றார். எம்.எல்.ஏ., லட்சுமணன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் முருகவேல், தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பொன்முடி முகாமை தொடங்கி வைத்து, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில், வருவாய்த்துறை சார்பில் 25 பேருக்கு பட்டா ஆணை, 3 பேருக்கு குடும்ப அட்டைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு சலவைப்பெட்டிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சமுக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் முகுந்தன், ஆர்.டி.ஓ., தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், ஒன்றிய துணை சேர்மன் உதயகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி கேசவன், வனிதா அரிராமன், ஒன்றிய கவுன்சிலர் ராமதாஸ், பில்லூர் ஊராட்சி தலைவர் சித்திரைசேகரன், விழுப்புரம் தாசில்தார்
வசந்தகிருஷ்ணன், பி.டி.ஓ.,க்கள் ராஜவேல், வெங்கடசுப்பிரமணியம், மேலாளர் பாபு மற்றும் முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.