/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
ADDED : ஆக 10, 2024 05:22 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவி அலகு மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், குழந்தைகள் வீடுகளில் ஆய்வு, குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள், இவர்களுக்கான பாதுகாப்பு குழு கூட்டம் குறித்தும், மாவட்டத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி அலகு 1098 தொலைபேசி அழைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகளுக்கான அவசர உதவி அலகின் 6 மாதங்களுக்கான அறிக்கை சரிபார்க்கப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.