/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 15, 2025 06:42 AM
திருவெண்ணெய்நல்லுார்: அண்டராயநல்லுார் கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு ஆலோசகர் முருகன் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தி பேசுகையில், 'பாலியல் ரீதியாக ஏற்படும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது. படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் படிப்பை தொடர்வது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது. பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க குழந்தைகள் சேவை எண் 1098, காவல் துறையின் 100, பெண்கள் உதவி எண் 181 ஆகிய இலவச எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் அளிக்கலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் முருகன், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.