/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாதாகோவில் ஜெபியை இடிக்காமல் மாற்றியமைக்க அவகாசம் வேண்டும் கிறிஸ்தவ மக்கள் கோரிக்கை

ADDED : ஆக 17, 2024 03:00 AM

விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே மாதாகோவில் ஜெபியை இடிக்காமல் அதனை மாற்றியமைக்க, அவகாசம் வழங்க வேண்டும் என அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவெண்ணைநல்லூர் அடுத்த பருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள், ஜான்பீட்டர் என்பவர் தலைமையில் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது:
பருகம்பட்டு கிராமத்தில், வழித்துணை மாதா கோவில் ஜெபக்கூடம் உள்ளது. பொது இடத்தில் உள்ள இந்த மாதா ஜெபியை இடிப்பதற்கு, அரசாணை வந்துள்ளதாகவும், அதிகாரிகள் அதனை அகற்ற உள்ளதாக தகவல் தெரிவித்தனர். பழமையான அந்த மாதா ஜெபியை இடிக்கக் கூடாது. இல்லாத பட்சத்தில் அந்த மாதா ஜெபியை, தற்போதுள்ளபடியே இடிக்காமல் அடியோடு மாற்றி வைப்பதற்கு, ஒரு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும்.
இந்த மாதா கோவில் ஜெபியை 300 குடும்பங்கள் வழிபட்டு வருகின்றனர். அதனை இடித்தால் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர். இந்த மனுவை பெற்ற அதிகாரிகள், விசாரித்து நடவடிக்கை எடுப்படும் என தெரிவித்தனர்.