/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் அச்சத்தில் பொதுமக்கள்
/
நெடுஞ்சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் அச்சத்தில் பொதுமக்கள்
நெடுஞ்சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் அச்சத்தில் பொதுமக்கள்
நெடுஞ்சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : ஏப் 27, 2024 12:14 AM

விழுப்புரம் : விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் வெளியேறும் புகை மண்டலத்தில் சிக்கி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
விழுப்புரத்தில் சென்னை, திருச்சி, புதுச்சேரி, திருக்கோவிலுார் தேசிய நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் எண்ணற்ற வாகனங்கள் பயணித்து செல்கிறது. அது மட்டுமின்றி இந்த தேசிய நெடுஞ்சாலைகளை சுற்றிலும் பல குடியிருப்பு பகுதிகள் உள்ளது.
நகராட்சி துப்புரவு பணியாளர்கள், குடியிருப்புகள் மற்றும் வீதிகளில் தேங்கும் மறுசுழற்சிக்கு தேவைப்படாத குப்பைகளை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தீயிட்டு எரிக்கின்றனர். இந்த துப்புரவு பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் குப்பைகளை தீயிட்டு எரிக்கின்றனர்.
இந்த பணியாளர்கள் சென்னை, திருச்சி மற்றும் புதுச்சேரி நெடுஞ்சாலைகளில் சாலையோரம் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அதன் மூலம் வெளியேறும் புகை மண்டலத்தால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதி பொதுமக்கள் சிக்கி சிரமப்படுகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் குப்பைகளை தீயிட்டு எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

