/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் 50 பேர் மீது வழக்கு பதிவு ; 4 பேர் கைது கல்வீச்சில் எஸ்.ஐ. காயம்

ADDED : செப் 11, 2024 01:47 AM
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, நான்கு பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார்.
பிரச்னையில் ஈடுபட்ட கும்பல் கற்களால் தாக்கியதில் சப் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார். அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மேலும், இரு தரப்பினர் புகாரின்பேரில் 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, நான்கு பேரை கைது செய்தனர். கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.