/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமானடியில் 8 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
கண்டமானடியில் 8 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கண்டமானடியில் 8 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கண்டமானடியில் 8 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : செப் 04, 2024 12:12 AM

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கண்டமானடியில் 8 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
கண்டமானடி, மரகதபுரம், வி.அரியலுார், கண்டம்பாக்கம், கொளத்துார், காவணிப்பாக்கம், அத்தியூர் திருவாதி, பிடாகம் ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் கண்டமானடியில் நடந்த முகாமிற்கு, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,கள் ராஜவேல், வேங்கடசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, முருகவேல் வாழ்த்திப் பேசினர்.
முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். ஏரளமான பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.