/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்ஒலக்கூரில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்
/
மேல்ஒலக்கூரில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : செப் 03, 2024 11:55 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சாரம், மேல்ஒலக்கூர் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த ஜூலை 16ம் தேதி துவங்கி, வரும் 6ம் தேதி வரை 91 முகாம்கள் நடத்தப்படுகிறது.
முகாம்களில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம்.
மேலும், மருத்துவ காப்பீட்டு அட்டை, வங்கி கணக்கு துவங்குதல் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது.
இதையொட்டி, இந்த முகாம் இன்று 4ம் தேதி சாரம், மேல்ஒலக்கூர் ஊராட்சிகளில் நடக்கிறது.
இந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை முகாமில் வழங்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.