sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மக்கள் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் வேண்டுகோள்

/

வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மக்கள் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் வேண்டுகோள்

வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மக்கள் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் வேண்டுகோள்

வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மக்கள் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் வேண்டுகோள்


ADDED : செப் 14, 2024 07:48 AM

Google News

ADDED : செப் 14, 2024 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம், வரைவு ஓட்டுச்சாவடிகள் பட்டியல் இறுதி செய்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை வகித்தார். மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் இறுதி செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆலோசனை நடந்தது.

அப்போது, கலெக்டர் பழனி பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 1,966 ஓட்டுச் சாவடிகளை ஆய்வு செய்த வகையில், தேவைக்கேற்ப புதியதாக 2 ஓட்டுச் சாவடிகள் உருவாக்கவும், 2 ஓட்டுச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்யவும், 12 ஓட்டுச் சாவடி மையங்களை புதிய இடத்திற்கு மாற்றம் செய்யவும் மற்றும் 4 ஓட்டுச்சாவடிகள் ் கட்டிட மாற்றம் ஆகியவற்றினை இறுதி செய்வதற்கு, சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.

விழுப்புரம் நகராட்சியில், வார்டு 28ல், - பாகம் 64 மற்றும் வார்டு 8ல்- பாகம் 83 ஆகிய ஓட்டுச்சாவடிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர். எனவே, பாகம் 64ஐ இரண்டாகவும், பாகம் 84ஐ இரண்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.இம்மாறுதலுக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 1968 ஆகும்.

மேலும் 1.1.2025ம் தேதி தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடர்பாக, வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட உள்ளது.

தே ர்தல் ஆணைய உத்தரவுப்படி, ஒவ்வொரு காலாண்டிலும், வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும், இதன்படி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஜன.1, ஏப்.1, ஜுலை 1, அக்.1 ஆகிய நான்கு தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திடும் வகையில் 17 வயது நிரம்பிய நபர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 பூர்த்தியாகும் ஆண்டில், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். தற்போது 100 சதவீதம் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கணக்கெடுப்பிற்கு வரும்போது, பொதுமக்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us