/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனூர் கோவில் தேர் திருவிழா அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
/
மேல்மலையனூர் கோவில் தேர் திருவிழா அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
மேல்மலையனூர் கோவில் தேர் திருவிழா அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
மேல்மலையனூர் கோவில் தேர் திருவிழா அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : பிப் 27, 2025 07:34 AM

செஞ்சி, ; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று மயானக்கொள்ளையும், 2ம் தேதி தீமிதி விழாவும், 4ம் தேதி தேர்திருவிழாவும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்துள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று கோவில் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகம், டி.எஸ்.பி.,க்கள் கார்த்திகா ப்ரியா, ஞானவேல், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், தாசில்தார் தனலட்சமி, பி.டி.ஓ.,க்கள் ஜெயசங்கர், சையத் முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசுகையில், விழாவிற்கு லட்சக்கணக்கான பகத்ர்கள் வருவார்கள்.
போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும்.
சி.சி.டி.வி.,க்கள் மூலம் கண்காணிக்க வும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் கட்ட போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
இதே போல் கழிவறை வசதி, குடிநீர் ஏற்பாடு, தற்காலிக பஸ் நிலையம் குறித்தும் கேட்டறிந்தார். மின் சப்ளை, தேர் பாதையில் மின் கம்பிகளை அகற்ற வேண்டும் எனவும், சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் அமைத்து, போதிய ஆம்புலன்சுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறித்தினார்.
தொடர்ந்து அவலுார்பேட்டை ரோட்டில் தாயனூர் மற்றும் நொச்சலூர் பகுதியில் பாலம் கட்டும் இடத்தில் ஆய்வு செய்த கலெக்டர், அங்குள்ள மாற்று பாதைகளை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டார்.