/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கஞ்சா விற்பனை வழக்கு கல்லுாரி மாணவர் கைது
/
கஞ்சா விற்பனை வழக்கு கல்லுாரி மாணவர் கைது
ADDED : ஆக 22, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கஞ்சா வழக்கில் தலைமறைவான கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வெங்கடாஜலபதி, யுவன் ராஜ், அழகுவேல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த செஞ்சி பாலப்பட்டை சேர்ந்த வெற்றி, 20; என்பவரை விக்கிரவாண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர் ஆலம்பூண்டியில் தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.