/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவர்கள் நடுரோட்டில் மோதல்
/
கல்லுாரி மாணவர்கள் நடுரோட்டில் மோதல்
ADDED : பிப் 15, 2025 04:40 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் காதலர் தினம் கொண்டாடியபோது ஏற்பட்ட தகராறில், அரசு கல்லுாரி மாணவர்கள் நடுரோட்டில் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நகர்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 3,000க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
காதலர் தினத்தையொட்டி, நேற்று மதியம் 12:00 மணிக்கு விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே வழக்கத்தை விட மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
இங்கிருந்த சில மாணவர்கள், திடீரென நடுரோட்டிலே ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அவர்களை அங்கிருந்த சக மாணவர்கள் விலக்கி விட்டனர். இது சம்பந்தமாக, மாணவர்கள் தரப்பில் கேட்ட போது, காதலர் தினத்தை கொண்டாடிய போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் மோதலாக மாறியதாக தெரிவித்தனர்.