/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகராட்சியில் கமிஷனர் பொறுப்பேற்பு
/
விழுப்புரம் நகராட்சியில் கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : செப் 01, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி கமிஷனராக வீரமுத்துக்குமார் பொறுப்பேற்றார்.
விழுப்புரம் நகராட்சியில் கமிஷனராக பணியாற்றிய ரமேஷ், சென்னை அடுத்த மறைமலை நகர் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். காரைக்குடி நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார், விழுப்புரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.