/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை திட்டத்திற்கு எடுத்த மண் விதிமீறி விற்பதாக புகார்
/
சாலை திட்டத்திற்கு எடுத்த மண் விதிமீறி விற்பதாக புகார்
சாலை திட்டத்திற்கு எடுத்த மண் விதிமீறி விற்பதாக புகார்
சாலை திட்டத்திற்கு எடுத்த மண் விதிமீறி விற்பதாக புகார்
ADDED : மே 03, 2024 12:16 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக எடுக்கப்பட்ட ஏரி மண்ணை விதிமுறை மீறி விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில், நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக மேம்பாலம், சாலைப் பணிகள் நடந்தது. இத்திட்டப் பணிகளுக்காக, சுற்றுப் பகுதி ஏரியில் இருந்த மண்ணை எடுத்து, சாலை ஒப்பந்த தனியார் நிறுவனத்தினர் பயன்படுத்தி வந்தனர். இதற்காக ஜானகிபுரம் பைபாஸ் பாலம் சந்திப்பு ஓரமாக மண்ணைக் கொட்டி வைத்திருந்தனர்.
பணி முழுதும் முடிக்கப்பட்டதால், அங்கு கொட்டியிருந்த மண் குவியலை தற்போது லாரிகள் மூலம் ஏற்றி அனுப்புகின்றனர். அதிகளவில் ஏரிகளில் மண் எடுத்த நிலையில், தற்போது மீதமுள்ள மண் குவியலை, அந்த ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், விதி மீறி விலைபேசி விற்பதாகவும், அதனால் அந்த மண் குவியல் லாரிகளில் அனுப்புவதாகவும், அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மீதமுள்ள மண் குவியலை, கனரக வாகன போக்குவரத்தால் பாதிக்கப்பட்ட ஜானகிபுரம், கண்டமானடி பகுதி சாலையோர பள்ளங்களில் கொட்டி சீர் செய்யாமல், மீண்டும் பள்ளம் ஏற்படுத்தும் விதமாக ஜே.சி.பி., மூலம் மண்ணை ஏற்றி அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். இதே போல், கண்டமங்கலம் பகுதியிலும், மீதமிருந்த மண் குவியலை விற்று விட்டதாகவும், இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.