/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி முறையில் பணி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 27, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால் முன்னிலையில், நடந்தது. 276 ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான 1,355 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு நிலைய அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன், தேர்தல் தனி தாசில்தார் கணேசன் உடனிருந்தனர்.